மேட்டூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு: 173வது தோல்வியை சந்திக்க ரெடி
சேலம்: மேட்டூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். இவர் வெள்ளிக்கிழமையன்று மேட்டூர் சார் ஆட்சியர் மேகனாத ரெட்டியிடம், தனது 173வது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவர் இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். இவர் எதிர்த்தவர்களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இந்நிலையில் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து உளுந்தூர்பேட்டையிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். நேற்று மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கடந்த 1996ம் ஆண்டு இவர் ஒரே சமயத்தில் 5 மாநிலங்களில் 8 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், சுயேச்சை வேட்பாளர்களை கட்டுப்படுத்த ஒருவர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இதேபோல, வைப்பு தொகையும் அதிகரிக்கப்பட்டது.
இவரின் இந்த தொடர் தோல்வி லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறையும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான பதிவையும் ஏற்படுத்தியுள்ளார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாக கொண்டுள்ளார்.
தற்போது இவர், மேட்டூர் தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தார். பத்மராஜன் போட்டியிடும் 173வது தேர்தல் இது. போட்டியிடுவதற்காக செலுத்திய டெபாசிட் தொகை 20 லட்சத்தை இதுவரை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications