”40 கிணறுகளைக் காணோம்” – டிராபிக் ராமசாமி போட்ட வழக்கு... சுற்றுச்சூழல் துறை ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகில் 40 கிணறுகள் காணமல் போய்விட்டன என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சுற்றுச்சூழல் துறையினர் தங்களுடைய ஆய்வினைத் துவங்கியுள்ளனர்.

வாலாஜா அடுத்த பூண்டி, வன்னிவேடு பாலாற்றில் மணல் அள்ளுவதால் நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதுதொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Environmental department search about wells in Vellore…

மேலும் வன்னிவேடு பாலாற்றில் மணல் அள்ளியதால் 40 குடிநீர் கிணறுகளை காணவில்லை என வாலாஜா தாசில்தாரிடம் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழுவினர் இன்று வன்னிவேடு பாலாற்றில் ஆய்வு செய்தனர். அப்போது மணல் அள்ளப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு குடிநீர் கிணறுகள் உள்ளதா எனவும், விதிமீறி மணல் அள்ளப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Environmental department survey about the 40 wells which was drained by sand thieves in Vellore.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற