சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு…: பரவும் 100 நாள் சேலை திட்டம்…!

Subscribe to Oneindia Tamil

இன்றைய நாகரீக உலகில் சேலை... பாவடை தாவணி அணிந்த பெண்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. கிராமத்தில் சேலை அணிந்த பெண்கள் கூட பணிக்காக நகருக்கு வந்த பின்னர் சுடிதார், ஜீன்ஸ், குர்தா, மிடி, டாஸ் என நவநாகரிக உடைக்கு மாறி வருகின்றனர். என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் பெண்களுக்கு என்று தனி அழகு தருவது புடவைதான்.

பெண்கள் முதன் முதலில் தாவணி அணிந்த நாளையும், புடவை அணிந்த நாளையும் மறக்கமுடியாது. தந்தையோ, கணவரோ முதன் முதலில் வாங்கிக் கொடுத்த புடவையைப் பற்றி ஆயிரம் கதைகளை வைத்திருப்பார்கள் பெண்கள்.

இவர்களின் கதைக்கு உயிரூட்டும் வகையிலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பெண்கள் சேலை அணிவதை ஊக்குவிக்க பெங்களூரை சேர்ந்த அலி மேத்தன், அஞ்சு காதம் ஆகியோர் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

100 நாள் சேலை அணியும் திட்டம்

100 நாள் சேலை அணியும் திட்டம்

இந்த பெண்கள் இருவரும் இணைந்து ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் hashtag #100sareepact என்ற தலைப்பில் ஹேஸ்டாக்கை உருவாக்கினர். மேலும் 100sareepact.com என்ற பெயரில் இணையதளத்தையும் ஏற்படுத்தினர்.

உறுதிமொழி எடுங்க

ஓராண்டில் 100 நாட்கள் சேலை அணிய வேண்டும். இதுதான் அலி மேத்தன், அஞ்சு காதம் மேற்கொண்டுள்ள உறுதிமொழி. இப்போது அவர்களைப் பின்பற்றி இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், 100 நாட்கள் கண்டிப்பாக சேலை அணிவேன் என்று உறுதிமொழி மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் ஆதரவு

ஒவ்வொரு பெண்ணும் சேலை கட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அந்தச் சேலை குறித்த பின்னணி கதையையும் சுவாரசியமாக விவரித்துள்ளனர். பி.பி.சி வரை இந்த சேலை புகழ் பரவியுள்ளது.

ட்விட்டரில் பிரச்சாரம்

இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான பெண்கள் சேலை கட்டிய தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

கதை சொல்லும் சேலைகள்

மிக நீளமான அந்தப் பட்டியலில் ஒவ்வொரு சேலையும் ஒவ்வொரு கதையை கூறுகிறது. பர்ப்பில் கலர் ( அதாங்க கத்திரிக்கா கலர்) கோயம்பத்தூர் காட்டன் சேலை கட்டியுள்ளேன் மனசுக்கு இதமாக உள்ளது என்று ஒரு பெண் பதிவிட்டுள்ளார். ஸ்மிதா திரிபாதி என்பவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள கட்டுரையில், இச்சேலையை எனது 6 வயது மகன் ஆர்யான் தேர்வு செய்தான், இதனால் இது எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியுள்ளார்.

ஜூட் காட்டன் சேலைகள்

காவேரி என்பவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஜூட் காட்டன் சேலைகள் அணிவதற்கும் மனதிற்கும் இதமானவை என்று பதிவிட்டுள்ளார்.

சாப்ட்வேர் இன்ஜினீயர் வித்யா ராமமூர்த்தி, கருப்பு மற்றும் தங்க நிறத்தில் சேலை அணிந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், அவரது பதிவில், எனது சொந்த உழைப்பில் வாங்கிய சேலைகள், அதனால் அவற்றை அதிகம் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவின் சேலையில்

அம்மா கட்டிய சேலையை மகள்கள் கட்டிக்கொள்வது ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒருபுடவையை அணிந்து அம்மாவின் மீதான பாசத்தை அதிகரித்துள்ளதாக பகிர்ந்துள்ளார் ராஜி என்கிற இந்தப் பெண்.

சேலை கட்டினால்

சேலை அணியும் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பதிவிட்டுள்ளனர் சிலர். அதில் அறிவியல் பூர்வமாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரவி வரும் பிரச்சாரம்

கடந்த மார்ச் மாதம்தான் அலி மேத்தனும் அஞ்சு காதமும் 100 நாள் சேலை உறுதிமொழியை மேற்கொண்டு அதை இணையத்தில் வெளியிட்டனர். இப்போது அந்தப் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அப்போ உங்க கதை என்னன்னு எப்போ சொல்லப்போறீங்க?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+