For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சி முடியும் போது அம்மா கால் சென்டர் எதற்கு என்று கேட்ட குஷ்பு... அவதூறு பேசிய இளங்கோவன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.

பொதுக்கூட்டமோ ஆர்பாட்டமோ போகுமிடமெங்கும் சர்ச்சையாக பேசும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று வேலூர் பொதுக்கூட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. யானைகள் முகாம் பற்றி பேசிய அவர், முதல்வரை சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

தனிப்படை போலீஸ்

தனிப்படை போலீஸ்

கூட்டத்தில் பேசிய குஷ்பு, ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவனை உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு அரசு ஊழியர் இறந்தாரே அதற்கு தனிப்படை அமைத்தார்களா? விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார்களா? என்று ஆரம்பத்திலேயே அனலை கிளப்பினார்.

அம்மா கால் சென்டர்

அம்மா கால் சென்டர்

சமீபத்தில் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதற்கு இதுவரை எந்த அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா? என்று கேட்டார்.

ஆறுதல் கூற வரலையே

ஆறுதல் கூற வரலையே

குஷ்புவிற்குப் பின்னர் மைக் பிடித்த ர் இளங்கோவன், ''மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா நிவாரணம் ஏதும் செய்யாவிட்டாலும், ஆறுதல் கூறுவதற்காகவாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. ஆறுதுல் கூறுவதற்கு கூட லாயக்கற்ற முதலமைச்சரை பெற்றுள்ளோம். அதனை சொல்லாமல் சொல்லி விட்டார் ஜெயலலிதா.

யானைகள் புத்துணர்வு முகாம்

யானைகள் புத்துணர்வு முகாம்

மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு வீடு கட்டி தராத ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார் என்று கூறிவிட்டு சர்ச்சையாக பேசினார்.

எம்.ஜி.ஆர் பெயர் வைக்கலையே

எம்.ஜி.ஆர் பெயர் வைக்கலையே

எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எப்போதெல்லாம் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் இந்த அம்மாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பிரியம் வரும். அதன் பிறகு எம்.ஜி.ஆரை மறந்து விடுவார். இதுவரை எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அந்த திட்டங்கள் எதற்காவது எம்.ஜி.ஆர். பெயரை வைத்திருக்கிறார்களா? அனைத்திலும் அம்மா புராணமே.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

அ.தி.மு.க. அரசை குறித்து விமர்சித்தாலோ அவதூறு வழக்கு போடுவது இந்த அம்மாவின் வாடிக்கை. கருணாநிதியை நீதிமன்றத்துக்கு வரவைத்தார். எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ராமதாஸ் மீது வழக்கு என அனைவர் மீது வழக்கு தொடுக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகள். ஆனால், ஜெயலலிதா மீது பெங்களூரில் இருப்பது கிரிமினல் வழக்கு.

மக்கள் விரோத சக்திகள்

மக்கள் விரோத சக்திகள்

இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஊழல். ரேஷன் அட்டை வாங்குவதற்கு 5 ஆயிரம், பஸ் கண்டக்டர் வேலைக்கு 5 லட்சம், துணை வேந்தர் 12 கோடி என்று பட்டியல் போட்டு ஊழல் செய்கிறார்கள். மத்தியில் மோடியும், இங்கு லேடியும் மக்கள் விரோத சக்திகள். இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி முடித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

English summary
Tamil Nadu Congress Committee (TNCC) President EVKS Elangovan Statement for comment on elephant rejenuvation camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X