எனது வாழ்வில் 3 பேருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்! நன்றி மறக்கமாட்டேன்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கம்!
ஈரோடு: தனது அரசியல் பொதுவாழ்வில் சிவாஜி கனேசன், சோனியாகாந்தி, ஸ்டாலின், ஆகிய 3 பேருக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் என்றும் நன்றி மறக்கமாட்டேன் எனவும் உருகியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், கொரோனா தொற்று, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் 15 நாட்களுக்கும் மேலாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இப்போது பூரண குணமடைந்ததால் ஈரோட்டில் முகாமிட்டு தொகுதிப் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவாஜி கனேசன், சோனியாகாந்தி, ஸ்டாலின், ஆகிய 3 பேரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தாம் கடமைப்பட்டிருப்பதாக உருகினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தாம் தொடர்வேன் என்றும் அமைச்சர் முத்துச்சாமியை பொறுத்தவரை ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டுமல்ல கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக செயல்படுகிறார் என பாராட்டினார்.

ஈரோட்டுக்கு அமைச்சர் முத்துச்சாமி எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் ஓரக்கண்ணால் பார்த்டுவிட்டுச் செல்வாரே தவிர ஈரோடுக்கு எந்த நலத்திட்டங்களையும் கொண்டுவர வில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் தான் அங்கு வெற்றி பெறும் என்றும் அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் எனவும் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications