ஓபிஎஸ் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக ஐக்கியமான மாஜி டிஜிபி திலகவதி!
ஓபிஎஸ் அதிமுகவில் ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அதிமுகவில் முன்னாள் டிஜிபி திலகவதி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுகவின் வேட்பாளராக திலகவதி களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சில நாட்களுக்கு முன்னர் திடீரென முன்னாள் டிஜிபி திலகவதி சந்தித்து பேசினார். அப்போது ஆர்கே நகரில் தாம் போட்டியிட விரும்புவதாக திலகவதி கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்து கணிப்பிலும் திகலவதிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக வாசகர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் திலகவரி நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கான ஓபிஎஸ் அதிமுகவின் வேட்பாளராக திலகவதி அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications