ஆரணியில் அதிரடி! சில்க் சிட்டியில் திமுக, அதிமுக வெல்லுமா? கிரவுண்ட் ரிப்போர்ட் இதோ! செம பாயிண்ட்!
ஆரணி: பட்டு நகரம் என அழைக்கப்படும் ஆரணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்த கள நிலவரத்தை பார்க்கலாம்
ஆரணி பட்டு, ஆரணி அரிசி, தறி உள்ளிட்டவைகளுக்கு பெயர் பெற்ற இந்த நகரம், முதலில் காடுகளாக இருந்தது. காடுகளை சங்க காலங்களில் ஆரணியம் என அழைப்பதுண்டு. அந்த ஆரணியம் என்ற பெயரில் இருந்து வந்ததுதான் ஆரணி என்பதாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆரணி லோக்சபா தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மல்லம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆரணி எம்பி தொகுதி வந்தவாசியிலிருந்து பிரிந்து வந்தது. இது 2009 ஆம் ஆண்டு முதல் எம்பி தொகுதியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 3 முறை நடந்த எம்பி தேர்தல்களில் காங்கிரஸ் இரு முறையும் அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை 14.45 லட்சமாகும்.
மேற்கண்ட 6 சட்டசபைத் தொகுதிகளில் செஞ்சி, மல்லம் ஆகிய தொகுதிகள் விழுப்புரம் மாவட்டங்களாகும். ஏனைய 4 தொகுதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவையாகும். ஆரணியில் உள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், தறி நெய்தல், பட்டு நெசவு, அரிசி ஆலைகள் உள்ளிட்டவை ஆகும். ஆரணி ஜெயினர்கள் அதிகம் வசிக்கும் பாரம்பரியம் கொண்டது.
ஆரணியில் உள்ள பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக மகாத்மா காந்தி இரு முறை ஆரணிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆரணியில் வரலாற்று சிறப்பு மிக்க போர்கள் நடந்துள்ளன. ஆரணியில் இருந்து சில கி.மீ. தூரத்தில் உள்ள எஸ்.வி.நகரத்தில் விஜயநகர பேரரசின் கோட்டை உள்ளது.
இத்தனை பெருமைகளை கொண்ட ஆரணி, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆரணியில் ஒன் இந்தியா தமிழ் நடத்திய கள நிலவரங்களை தற்போது பார்ப்போம். ஆரணி தொகுதியில் அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.
ஆரணியில் திமுக சார்பில் தரணி வேந்தனும், அதிமுக சார்பில் கஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள். அது போல் பாமக சார்பில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். கீழ்கண்ட காரணிகளே ஆரணியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என்கிறார்கள்.
- ஆரணியில் கூட்டணி விஷயத்தில் திமுக பலமாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்டவை உள்ளன. அது போல் அதிமுகவில் தேமுதிக மட்டுமே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் அதிமுகவுக்கு அந்தளவுக்கு பலமில்லை.
- திமுக கூட்டணியை பார்த்தோமேயானால் அங்கு திமுக அரசு மீது, கடந்த ஆண்டு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தால் பிரதான கூட்டணி கட்சியின் ஒரு பிரிவினர், அதிருப்தியில் உள்ளது. இதனால் அந்த பிரிவினர், திமுகவின் வெற்றிக்கு உழைக்கக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். இது திமுகவுக்கு மைனஸாகி உள்ளது.
- அது போல் திமுகவுக்குள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. ஆரணி நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகளுக்கு நகராட்சியில் உயர் பதவியில் இருப்போரால் புறக்கணிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சில கவுன்சிலர்களை மட்டுமே உயர் பதவியினர் தங்களுடன் வைத்துக் கொண்டுள்ளதாகவும் மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் திமுகவுக்குள்ளேயே அதிருப்தி நிலவுகிறது. இதுவும் திமுகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.
- இன்னொன்று திமுக கூட்டணியில் ஆரணி எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத், இதுவரை எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது நடுநிலையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. தற்போது அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் திமுகவே நேரடியாக களம் காண்கிறது. இது திமுகவுக்கு பிளஸ்ஸாக உள்ளது.
- அதிமுகவை எடுத்துக் கொண்டால் தேமுதிகதான் அடுத்த சற்று பெரிய கூட்டணி கட்சியாகும். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சேவூர் ராமசந்திரன், பழம்கால கோயிலான புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முன்னெடுத்ததாகவும் அங்கு கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் திருமண மண்டபத்தை கட்டிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- இதனால் அதிமுகவுக்கு சாப்ட் கார்னர் இருக்கிறது. மேலும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆரணி தொகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் பெண் எம்எல்ஏ ஒருவர், அதிமுகவின் வெற்றிக்காக தீயாய் வேலை செய்து வருகிறாராம்.
- மொத்தம் 6 சட்டசபைத் தொகுதிகளில் போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய 3 தொகுதிகளில் எப்படியும் தன்னால் வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரமுடியும் என்கிறாராம். மேலும் அதிமுக வேட்பாளர் ஆரணியை சேர்ந்தவர், என்பதால் அவர் ஆரணியில் எப்படி அதிமுகவுக்கு வாக்குகளை வாங்கிவிடலாம் என கணக்கு போட்டுள்ளனராம். மீதமுள்ள இரு தொகுதிகளான செஞ்சி, மல்லம் தொகுதிகளில் ஒரு 10 ஆயிரம், 20 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றாலும் கூட வெற்றி வாய்ப்பை பெறலாம் என திட்டமிட்டுள்ளனராம்.
இப்படியாக அதிமுகவும் திமுகவும் களத்தில் ஜரூராக பணியாற்றி வருகிறார்கள். எனவே இவர்களில் யார் வெற்றியாளர் என்பதை நடுநிலை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய முடியும் என களநிலவரங்கள் சொல்கின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications