முதல்வரின் நிவாரணம் வேண்டாம்... கோவையில் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை : சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.நிவாரண தொகையை ஏற்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி CCTV! சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் காட்சி-வீடியோ

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

Families of Somanur building collapse victims protest against Govt

இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுனர் சிவக்குமார், துளசிமணி (50), தாரணி (20) கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் பிணம் என இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5 பேர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5க்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிட இடிபாடுகள் விழுந்து பலருக்கும் கை கால்கள் உடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா. ரூ. 4 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா. ரூ.50000, சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 25000 நிவாரணம் அளிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்களை வாங்க மறுத்தும் நிவாரணத்தொகைகை ஏற்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Family members of the Somanur building collapse victims have rejected the TN Govt's solatium and protest against Govt in the Coimbatore GH
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற