நாட்டிலேயே ரொம்ப 'ஸ்மால் பேமிலி' தமிழ்நாட்டில்தான் அதிகமாம்!!
சென்னை: சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப அமைப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கையின் படி தமிழகத்தில் தான் குறைந்த உறுப்பினர்களுடன் கூடிய சிறிய குடும்பங்கள் அதிகளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் குடும்ப அமைப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்மூலம், உத்தரப்பிரதேசத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களும், தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில்...
குடும்ப அமைப்பு கணக்கெடுப்புப் படி, உத்தர பிரதேசத்தில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 6 பேர் வசிப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜம்மு-காஷ்மீரில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 5.8 பேர் உள்ளனர்.
கிராமங்களில் அதிகம்...
பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நகர்புறங்களை விட கிராமங்களில் மக்கள் தொகை அதிகம் உள்ளது.
தமிழகத்தில்...
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு குடும்பத்துக்கு 3.9 உறுப்பினர்கள் என்ற அளவில் தான் உள்ளதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
பிறப்பு விகிதம் குறைவு...
தமிழ்நாட்டில் மிக சிறிய குடும்பங்களாக மாறியதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கது பிறப்பு விகிதம் குறைந்ததே என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
குறைந்து வரும் கிராமங்கள்...
அதேபோல், தமிழகத்தில் கிராமங்கள் குறைந்து நகரங்கள் அதிகரித்து வருவதும் இந்த சிறிய குடும்பங்களுக்கு மற்றொரு முக்கியக் காரணம் என அவர்கள் கூறுகிறார்கள்.
கேரளாவில்....
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 4.0 உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications