இரட்டை குழந்தைகளை கொன்று கணவரோடு தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி ஆசிரியை-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சல் அடைந்த தம்பதி 11 மாத இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுதா. அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செந்தில்குமார் பழக்கடை மற்றும் பங்குசந்தை தொழில்களை செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார்.

 A family consists of 4 were committed suicide in Tiruppur

இவர்களுக்கு விவிதா, விசிதா என்ற 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடன் சுமையால் அவதிப்பட்ட செந்தில்குமார்-சுதா தம்பதியினர் குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A couple in Tiruppur who has trapped in debt problem murdered their 11 months old twin children and after that they too committed suicide.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற