
சென்னை: தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் 4 நாட்கள் காத்திருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று 2-வது நாளாக சந்தித்து வருகிறார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

இன்று தமது ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு குடும்பமே மிக முக்கியமானது. ரசிகர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமது அரசியல் பிரவேசம், நிலைப்பாடு தொடர்பாக இன்னும் 4 நாட்கள் காத்திருங்கள் என்றார்.
#TamilNadu: Fans pose with #Rajinikanth for the second day at Raghavendra Mandapam in #Chennai as part of his six day meet. pic.twitter.com/MXaU7c5cme
— ANI (@ANI) December 27, 2017
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!