கடன் தொல்லையால் பரிதாபம்.. மனைவி, மகள், செல்லப் பிராணிகளுடன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி !
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விவசாயி வெற்றிவேல் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரை அடுத்த செறுமுள்ளி கிராமம், முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது மகள் பாரதி. 11ம் வகுப்பு படிக்கும் பாரதியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்த தோழி நித்யா, வீட்டின் கதவில் நூலால் கட்டி தொங்க விடப்பட்டிருந்த காகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், உள்ளே அனைவரும் இறந்து விட்டனர். போலீசை அழைக்கவும். யாரும் உயிருடன் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இதனை கண்ட நித்யா, உடனே தனது பெற்றோரிடம் கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் போலீசார், வீட்டினுள் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அனைவரும் இறந்து கிடந்தனர். மனைவி, மகளுடன், இரண்டு நாய்களையும் வெள்ளைத் துணியால் தனித்தனியாக சுற்றி, சந்தனம் மற்றும் குங்குமத்துடன் இறுதி சடங்கு செய்துவிட்டு வெற்றிவேல் தூக்கில் தொங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
19 லட்சம் ரூபாய் கடனுடன் வாழ பிடிக்கவில்லை என்று அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications