கடும் வறட்சி.. பயிர்கள் கருகி நாசம்.. வாழப்பாடி அருகில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகி நாசமானதால் வாழப்பாடி அருகில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்: வாழப்பாடி அருகில் கடும் வறட்சி காரணமாக விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் விவசாயி காளியப்பன் வசித்து வந்தார். 55 வயதான இவர் தங்களது நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன.
இதனையடுத்து, கடந்த 3 நாட்கள் மூன்று விவசாயி காளியப்பன் வீட்டில் யாரிடம் சொல்லாமல் எங்கே சென்றுவிட்டார். அவருடைய உறவினர், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட காளியப்பன் எங்கோ காணாமல் போய்விட்டார் என்று அழுது புலம்பி வந்தனர்.

பிணமாக மீட்பு
இந்நிலையில், அவர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இன்று தெரிய வந்தது. காணாமல் போய்விட்டார் என்று நினைத்த காளியப்பன் பிணமாக மீட்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். இதனால் வாழப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சிக்கு பலி
வடகிழக்கு பருவமழைப் பொய்த்துப் போனது, காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்காதது என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர்.

டெல்லி போராட்டம்
இந்தக் கொடுமையில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டும் என்று கோரியும், விவசாயி பயிர்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 21 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எப்போது தீர்வு
ஆனாலும், மத்திய அரசு விவசாயிகளையும் அவர்களது போராட்டத்தையும் உதாசினப்படுத்தி வருகிறது. அவர்களும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பப் போவதில்லை என்று உறுதியுடன் போராடி வருகின்றனர். எப்போது விடியும் விவசாயிகளின் வாழ்க்கை!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications