தொடரும் அவலம்.. பயிர்கள் கருகியதால் திருவாரூர் அருகே விவசாயி தற்கொலை
திருவாரூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருவாரூர் அருகே பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்து மாராடைப்பால் உயிரிழந்தனர். வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயிகளின் உயிரிழப்பும் நூரை தாண்டியது. இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணமும் அளித்தது. ஆனால் அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்று கூறிய விவசாயிகள் உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் செருவாமணி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான ரமேஷ் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பயிர் கருகியதால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications