கோவை அருகே பரிதாபம்.. ஒரு வயது பெண் குழந்தை வயிற்றில் வளர்ந்த 3.5 கிலோ சிசு அகற்றம்!
கோவை: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் இருந்து, 3.5 கிலோ எடையுள்ள கருவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர் டாக்டர்கள்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சுமதி. இவர்களுடைய ஒரு வயது பெண் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் பெரிய வீக்கம் ஏற்பட்டது. அதனால், அக்குழந்தை காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள், ஸ்கேன் மூலமாக குழந்தையைப் பரிசோதித் தபோது, குழந்தையின் வயிற்றில் உள்ள கட்டியில் சிசு வளர்வதையும், கல்லீரல், மண்ணீரல் இடம் மாறியிருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரி தலைமையில் குழந்தைக்கு சனிக்கிழமை 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த 3.5 கிலோ சிசு அகற்றப்பட்டது.
அரிதிலும் அரிதாக இது போன்று ஏற்படும் என்று கூறிய மருத்துவர்கள், பெரிதும் சிரமப்பட்டு கருவை அகற்றியாக கூறினர். கருவானது சிறுநீரகம், கணையம், மண்ணீரம் இவற்றுடன் இரண்டற கலந்து பிணைந்திருந்ததால் அறுவை சிகிச்சை கடினமானதாக அமைந்தது.
இணைந்திருந்த உறுப்புகளை நீக்கவிட்டு கருவை அகற்றிய பின்னர், அதே இடத்தில் உறுப்புகளை பொருத்தியுள்ளனர். 8 கிலோ எடை இருந்த நிஷாவின் வயிற்றில் இருந்து 3.5 கிலோ எடையுள்ள கருவானது அகற்றப்பட்டுள்ளது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளகதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications