டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா ? : டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு
தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று இறுதி தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி : டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பளிக்க இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்து கட்சி சின்னமான இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி வந்தது. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்தது.

இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் வேறு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது. பிறகு, அ.தி.மு.க.,வில் நடந்த மாற்றங்களால் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கே சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
ஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், ஒருதலைபட்சமாக செயல்பட்டு சின்னத்தை ஒதுக்கி இருப்பதாகவும் டி.டி.வி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை கடந்த 1ம் தேதி விசாரித்த நீதிபதி எஸ்.பி.கர்க் தொப்பி சின்னம் ஒதுக்கீடு குறித்தான இறுதி உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இன்று விசாரணையில் டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்படுமா என்று அவரது அணியினர் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications