சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது. உயித்சேதமோ, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட போர்ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் இயந்திரத்தில் மருந்து கலக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மருந்து கலக்கும் இயந்திரம் மற்றும் ஒரு அறை தரைமட்டமானது. காலை நேரம் என்பதால் பணியாட்கள் யாரும் வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அடிக்கடி இங்கு வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலிப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 50 பேர் பலியானார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications