திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் திடீரென ஸ்தல விருட்ச மரம் பற்றி எரிந்தால் பக்தர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவாலங்காட்டில் உள்ள வடாரணயேஸ்வரர் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அக்கோயிலின் ஸ்தல விருட்சம் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

திருவள்ளூர்- அரக்கோணம் சாலையில் 16-ஆவது கி.மீ.தூரத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு புகழ்பெற்ற வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இது திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும்.

Fire accident in Thiruvalangadu temple

இங்கு இன்று இரவு 9.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

தகவலறிந்த அரக்கோணம் ,பேரம்பாக்கம், திருத்தணி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சிக்கு ஆபத்து, நாட்டில் பஞ்சம, தண்ணீர் பற்றாக்குறை, மக்களுக்கு இடையூறுகள் என நடைபெற வாய்ப்பிருப்பதாக ஜோசியர்கள் கணித்த நிலையில் தற்போது திருவாலங்காடு கோயிலில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

திருவாலங்காடு கோயிலில் போதிய பாதுகாப்பு இல்லாததே தீவிபத்து காரணம் என்று கூறி கோயில் முன்பு இந்து மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire accident occurs in Thiruvalangadu temple. Temple's holy tree sets fire.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற