சென்னையில் செல்போன் டவரில் தீ விபத்து - தீயை அணைக்க 2 மணி நேரம் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : செல்போன் டவரில் திடீர் தீ விபத்து காரணமாக நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிகவளாகம் ஒன்றின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செல்போன் டவரில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.

Fire at cell phone tower in Chennai

இந்த விபத்தில் செல்போன் டவர் அடியில் இருந்த பேட்டரிகள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் கொளுந்து விட்டு எரிந்தது. மின்கசிவு காரணமாக செல்போன் டவரில் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fire at cell phone tower in Chennai
Fire at cell phone tower in Chennai

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டததால் யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A suspected electrical short circuit resulting in a fire destroyed the control room of a cell phone tower at Nungambakkam in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற