இலங்கை கடற்படையிடம் சிக்கிய தமிழக மீனவர்.. பாட்டிலை விழுங்கி தற்கொலை முயற்சி
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் ஒரு மீனவர் பாட்டிலை உடைத்து விழுங்கி தற்கொலைக்கு முயற்சி.
கோடியக்கரை: கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து திரிகோணமலையில் அடைத்து வைத்துள்ள விவகாரத்தில் ஒரு மீனவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். அக்கறைப் பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான படகில், 8 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் சிறைபிடித்தனர். இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிடியில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்வதால் மீனவர் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த 8 பேரில் ஒரு மீனவர், பாட்டிலை உடைத்து அதை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 7 மீனவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டகாசத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications