எடப்பாடி அமைச்சரவையில் தினகரனின் 5 ஸ்லீப்பர் செல்கள்? எந்த நிமிடத்திலும் விஸ்வரூபம்?
தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் 5 அமைச்சர்கள் எந்த நிமிடத்திலும் விஸ்வரூபமெடுக்கலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடியார் அணியில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என தினகரன் கூறியதை நிரூபிக்கும் வகையில் 5 அமைச்சர்கள் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்க தயாராக உள்ளனர் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
தினகரனுக்கு தற்போது 19 எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு என்னதான் முடிவை அறிவிக்கவில்லை என கூறினாலும் தினகரன் பக்கம்தான் இருக்கின்றனராம்.

5 அமைச்சர்கள்
இந்த 22 எம்.எல்.ஏக்கள் அல்லாமல் மேலும் 15 எம்.எல்.ஏக்கள் வரை தினகரன் அணிக்கு வரக் கூடும் என கூறப்படுகிறது. இந்த 15 எம்.எல்.ஏக்களும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் 5 அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனராம்.

ஓ.எஸ். மணியன்
சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுப்போம் என வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்த போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் அமைச்சர் ஓ.எஸ். மணியன். அத்துடன் பொதுக்குழுவைக் கூட்டினால் சசிகலாவே பொதுச்செயலராக தேர்வு செய்யும் நிலைமையும் ஏற்படும் என பீதியை கிளப்பி வருகிறார் ஓ.எஸ். மணியன்.

ஸ்லீப்பர் செல்கள்
அதேபோல் திவாகரனே, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சசிகலா நீக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள் என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். மொத்தம் 5 அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

ஆட்சி கவிழ்வது உறுதி
இவர்கள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கும் போது அவர்களுக்கு பின்னால் இருக்கும் எம்.எல்.ஏக்களும் வெளியே வருவார்கள். இதனால் எடப்பாடி அரசு கவிழ்வது மட்டும் உறுதி என அடித்து சொல்கிறது தினகரன் தரப்பு.
-
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
கூட்டுறவு சங்க பயிர்க்கடன் தள்ளுபடி.. விஜய் அரசு தந்த அல்வா! 2024 முதலே கணக்கெடுங்க: சீறிய எஸ்டிபிஐ -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications