வேளச்சேரி- தரமணி சாலையில் குளம் போல தேங்கிய கழிவு நீர் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் வேளச்சேரி- தரமணி சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. பல பகுதிகளில் வெள்ளம் வடிந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர், சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.

மழை நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளது. இந்த தண்ணீரை அகற்றுவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் நிலைமையை சீர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தாலும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றுக் கொண்டு இருக்கின்றன. ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுத்தி தண்ணீரை போக்குவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தாலும் அந்த உடைபுக்குள் தண்ணீர் போகாமல் சாலையிலேயே தேங்கியுள்ளதால் சாலை முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
மேயர் சைதை துரைசாமி 2 நாட்களுக்கு முன் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குள் சென்னை மாநகரில் தேங்கி நிற்கும் அனைத்து தண்ணீரையும் அகற்றி விடுவோம் என உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications