தஞ்சையில் 500 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்- ஆட்சியர் விளக்கம்
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பாபநாசத்தில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலியானவை அல்ல; அவை மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தை தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது, வாகனத்தில் ஏராளமான போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அந்த இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஓட்டுநர் முருகேசன்,45 , க்ளீனர் ரமேஷ் ஆகியோரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலியானவை அல்ல; அவை மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
பாபநாசத்தில் வாகன சோதனையின் போது 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அவை அட்டையால் செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன், வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க அட்டையால் தயாரிக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இவை என்று கூறியுள்ளார்.
மேலும், சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருவாரூருக்குக் கொண்டு சென்ற போது, அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாகவும், தஞ்சை ஆட்சியர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிமுக தேர்தல் சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications