ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக.. ஒரு "பளார்" புகார்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் மீது ஒரு தாக்குதல் புகார் வந்துள்ளது. ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிர வைத்துள்ள சம்பவத்தால் தேசிய அளவிலும் பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளார் சசிகலா புஷ்பா.
இதுவரை ஜெயலலிதா தன்னை அடித்ததாக யாருமே புகார் கூறியதில்லை. அவருடனேயே இருந்து அவருக்கு மிகப் பெரிய விசுவாசிகளாக இருந்து பின்னர் திமுகவுக்கோ பிற கட்சிகளுக்கோப் போனவர்கள் கூட ஜெயலலிதா மீது இப்படி ஒரு புகாரைக் கூறியதில்லை.
ஆனால் அதிமுகவினரே ஆடிப் போகும் அளவுக்கு, என்னை ஜெயலலிதா அடித்தார், எப்படி என்னை அடிக்கலாம் என்று கேட்டு அதிர வைத்து விட்டார் தூத்துக்குடி சசிகலா புஷ்பா.

வரலாறு காணாத புகார்
ஜெயலலிதாவை பெரும்பாலும் அதிமுகவினர் அம்மா என்றுதான் பாசமுடன் அழைக்கின்றனர் - வயது வித்தியாசம் இல்லாமல். "அம்மா"வின் அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை என்பது அதிமுகவினரின் ஏகோபித்த தீர்ப்பு.

கண்டிப்பும் கறாரும்
அதேசமயம், ஜெயலலிதா மிகவும் கண்டிப்பானவர். தப்பென்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தூக்கி வீசி விடுவார். இதுவும் அதிமுகவினருக்குத் தெரியும். "அம்மா" எந்த அளவுக்கு அன்பும், பாசமும், நம்பிக்கையும் வைக்கிறாரோ அதற்கு யாராவது குந்தகம் விளைவித்தால் அவர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டவும் அவர் தயங்க மாட்டார் என்பது அதிமுகவினரின் கூற்றாகும்.

அடித்ததாக வந்த முதல் புகார்
ஆனால் ஜெயலலிதா தன்னை அடித்ததாக அவர் மீது முதல் முறையாக புகார் வந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுவரை யாருமே இப்படிப்பட்ட புகாரை ஜெயலலிதாவுக்கு எதிராக கூறியதில்லை கூறத் துணிந்ததும் இல்லை.

சேகர்பாபு - கராத்தே தியாகராஜன்
சசிகலாவை விட பல மடங்கு அளவுக்கு ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்தவர்கள் பி.கே.சேகர்பாபு, கராத்தே தியாகராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர். அவர்களை தனது தளபதிகளாகவே நடத்தி வந்தவர் ஜெயலலிதா. அவரது கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டவர்கள் இவர்கள்.

அவர்கள் கூட சொல்லலையே!
ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு நல்ல நாளாக பார்த்து அதிமுகவை விட்டு விலகிப் போனபோதும் கூட, ஜெயலலிதா குறித்து தவறாகவோ, அவர் அடித்ததாகவோ, திட்டியதாகவோ எந்தப் புகாரையைும் கூறியதில்லை. திமுக மேடையில் எந்த இடத்திலும் ஜெயலலிதா குறித்து அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை சேகர்பாபு.

ஏன் சசிகலா மட்டும்?
அப்படி இருக்கும்போது, அவர்கள் யாருமே சொல்லாத புகாரை, தன்னை அடித்ததாக சசிகலா புஷ்பா மட்டும் கூறியிருப்பதுதான் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.. யோசிக்கவும் வைத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு சவாலா?
இதுவரை இப்படிப்பட்ட புகாரை ஜெயலலிதா ஒருமுறை கூட பொதுவாழ்வில் இவ்வளவு பகிரங்கமாக சந்தித்தில்லை. ஆனால் எத்தனையோ பிரச்சினைகளைப் பார்த்த அவர் இதையும் ஊதித் தள்ளி விடுவார் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications