ஓபிஎஸ் இன்று நெல்லை வருகை.. பிரமாண்ட ஏற்பாடுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் இன்று நெல்லை செல்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நெல்லையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள ஓபிஎஸ் இன்று நெல்லை வருகிறார்.

Former chief minister O.Paneerselvam going to Nellai today

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், எடப்பாடி பழனிசாமி, தினகரன் அணிகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்கவும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தமிழகம முழுவதும் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

நெல்லை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பாளை பெல் மைதானத்தில் இன்று நடக்கிறது. வழக்கமாக அரங்கம், மண்டபத்தில் நடக்கும் செயல் வீரர்கள் கூட்டம் இங்கு பொது கூட்டம் போல் திறந்த வெளியில் நடக்கிறது. செயல் வீரர்கள் கூட்டத்திற்கு முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், முனியசாமி, செம்மலை, பாண்டியராஜன், சண்முகம், ஜெயபால், எம்மிக்கல் மைத்ரேயன், நட்டர்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர வசதி செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former chief minister O.Paneerselvam going to Nellai today. For this arrangements are getting ready in the area.
Please Wait while comments are loading...