For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவி நவீனா கொலைக்கு நியாயம் கிடைக்க ஹைகோர்ட்டில் வழக்கு: பாமக பாலு அதிரடி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு, பாமக முன்னாள் எம்எல்ஏ குரு மற்றும் பாமக செய்தித் தொடர்பாளர் பாலு நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.35,000 நிதியுதவி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், வ.பாளையம் கிராமத்தில் கடந்த 30-ந் தேதி செந்தில் என்பவர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவி நவீனா என்பவரை கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, செந்தில் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பலனின்றி ஆகஸ்ட் 3-ந் தேதி உயிரிழந்தார்.

Former PMK MLA Guru paid Tributes to Naveena and gave Rs.35,000

உயிரிழந்த மாணவியின் உடலுக்கு பாமக முன்னாள் சட்டசபை உறுப்பினர் குரு மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிருமான பாலு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.35,000 நிதி உதவி வழங்கினர்.

அப்போது பாமக முன்னாள் சட்டசபை உறுப்பினர் குரு கூறியதாவது: மாணவிகளுக்கு பாதுபாப்பு இல்லை. படிக்க வேண்டிய வயதில் நவீனாவை தொந்தரவு செய்ததால் அவர் படிப்பை தொடர முடியாமல் போனது. அதுமட்டுமன்றி தற்போது நவீனா உயிரிழந்துவிட்டார். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லுகிறோம் நாடகக் காதல் என்று. ஆனால், சில அமைப்புகளும், சில தலைவர்களும் இதை மறுத்து வருகின்றனர். இப்போது இதற்கு என்ன பதில்? இனி என்ன ஆறுதல் கூறினாலும் உயிரிழந்த மாணவி நவீனா திரும்பி வருவாரா? என கேள்வி எழுப்பினார்.

பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிருமான பாலு கூறியதாவது: இதனை நாங்கள் இப்படியே விட்டுவிடப் போவதில்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். செந்திலுக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. சுருளிராஜனிடம் மனு அளிக்க உள்ளோம்.

விரும்பாத பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் முதல், கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள் தான்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிரிழந்த ஆகஸ்ட் 3-ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாக பாலு தெரிவித்தார்.

English summary
Former PMK MLA Guru and PMK spoke person Balu paid Tributes to Naveena and gave Rs.35,000 to her family. while PMK Spoke person Balu said that they will lodge plea against this murder case in HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X