கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!
கோவையில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக இலவச இருதய சிகிச்சை நடைபெற்றது.
Recommended Video

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவையில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக நடைபெற்ற இலவச இருதய சிகிச்சையில் ஏராளமானோர் பயன் அடைந்தனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதந்தோறும் பல்துறை மருத்துவ வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் மெட்கிரீன் மருத்துவமனை சார்பாக இன்று இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மக்கள் நீதி மையத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகமானது நடைபெற்று வருகிறது.
இன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.












Click it and Unblock the Notifications