For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்திய வெளிநாட்டுக்காரர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பழைய பெயரையும், காமராஜர், மூப்பனார் படங்களுடன் புதிய கொடியையும் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாசனின் புதிய கட்சிக்கு, தமிழ் மக்கள் காங்கிரஸ், தமிழக காமராஜர், மூப்பனார் காங்கிரஸ் எனப் பல்வேறு பெயர்களை பரிசீலனை செய்த வாசன், தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கினாலும் மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைப்பதை உறுதி செய்ய முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் புதிய கொடியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியின் கொடி போலவே இதை உருவாக்கியுள்ளனர். அதேசமயம், ராட்டைக்குப் பதில் காமராஜர், மூப்பனார் படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கொடிக்கு வாசன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், "முன்னர் அறிவித்தபடி, புதிய கட்சியின் பெயர், சின்னம் குறித்த விவரங்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

G.K.Vasan chooses new flag and name for the party

முன்னதாக அவர் ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், அதன்பிறகு டென்மார்க், சூவிடன், நார்வே மற்றும் ஸ்காண்டிநேவியன் நாடுகளில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட குழுவுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.

English summary
Sources say, G.K.Vasan has selected new flag and name for his new party. He goes to use Moopanar and Kamarajar photos in flag and party name as Tamil Manila Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X