திருவள்ளூரில் பதுங்கியிருந்த 53 ரவுடிகள் கைது... 45 பேர் விடுவிப்பு... 8 பேரிடம் தொடர்கிறது விசாரணை
திருவள்ளூரில் பதுங்கியிருந்த 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 53 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 45 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவள்ளூரில் சோழவரம் பகுதியில் சென்னை ரவுடிகள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு மர்ம தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்டந்தாங்கல், காந்தி நகர், சோலையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில் 53 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். விடிய விடிய நடந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் 45 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 8 பேரிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள மலையாம்பட்டு கிராமத்தில் ரவுடி பினு பிறந்த நாள் விழா கொண்டாடினார். இந்த தகவலை அறிந்த போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்து 70 ரவுடிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications