த.மா.கா.வை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் சேர ஜி.கே.வாசனுக்கு டெல்லி நெருக்கடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தா.ம.க.வை கலைத்துவிட்டு ஜி.கே.வாசன் ரஜினியுடன் இணைய வாய்ப்பு?- வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆள் பிடித்துவிடுவதில் 'பிள்ளை பிடிக்கும்' கும்பலைப் போல டெல்லி படுதீவிரமாக இருந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் இணைந்துவிடுங்கள் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடும் நெருக்கடி தருகிறதாம் டெல்லி.

  காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் மோதி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ஜி.கே.வாசன். என்னதான் காங்கிரஸ் பாரம்பரியம் என கூறிக் கொண்டாலும் டெல்லிக்கு மிக நெருக்கமான பெரும் தொழிலதிபரின் கண்ணசைவில்தான் தமாகாவின் முடிவுகள் இருந்து வருகின்றன.

  இதனால்தான் தேர்தல்களின் போது பாஜக பக்கம் தமாகா காற்று வீசுகிறது என செய்திகள் வெளியாகும். இந்நிலையில் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்துள்ளது டெல்லி.

  அதிருப்தியாளர்களுக்கு வலை

  அதிருப்தியாளர்களுக்கு வலை

  ரஜினியின் புதிய கட்சிக்கு பிரமுகர்களை சேர்த்துவிடுவதில்தான் இப்போது டெல்லி படுபிசியாக இருக்கிறதாம். ஒவ்வொரு கட்சியிலும் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பவர்கள், சொத்துகளை வாங்கி குவித்திருப்பவர்கள், வழக்குகளில் சிக்கியிருப்பவர்களாக கணக்கெடுத்து மிரட்டி ரஜினிகாந்த் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது டெல்லி.

  வாசனுக்கு நெருக்கடி

  வாசனுக்கு நெருக்கடி

  அதேபோல் சிறு சிறு கட்சிகளையும் ரஜினி கட்சியில் இணைப்பதற்கான பேரங்களையும் டெல்லி முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக டெல்லிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக தமாகாவை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் இணைந்துவிடுங்கள்; அது ரஜினிக்கும் உங்களுக்கும் பெரிய பலமாக இருக்கும் என ஜி.கே.வாசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

  ஜிகே வாசன் ஆலோசனை

  ஜிகே வாசன் ஆலோசனை

  அப்படி செய்யும்போது 1996-ம் ஆண்டு ரஜினி- மூப்பனார்; இப்போது ரஜினி- மூப்பனார் மகன் வாசன் என்கிற இமேஜ் உருவாகும். இது ரஜினிகாந்துக்கு புதிய அடையாளத்தை தரும் என நம்புகிறதாம் டெல்லி. இது தொடர்பாக கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

  விழிபிதுங்கும் வாசன்

  விழிபிதுங்கும் வாசன்

  ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியை கலைக்கும் முடிவுக்கு விருப்பம் தெரிவிக்காமல் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். டெல்லியின் நெருக்கடிக்கு பணிவதா? அல்லது நம்பி வந்த கட்சியினர் முடிவுக்கு கட்டுப்படுவதா? என தெரியாமல் விழிபிதுங்கியிருக்கிறாராம் வாசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sources said that Tamil Manila Congress may merge with Rajinikanth's new political party.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற