கடவுளே, கொஞ்சம் கருணைகாட்டப்பா: ரத்தக் கண்ணீர் வடிக்கும் சென்னைவாசிகள்
சென்னை: வெள்ளத்தில் சிக்கி அல்லல்படும் சென்னை மக்கள் கடவுளே கொஞ்சம் கருணை காட்டு என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. ஏற்கனவே மக்கள் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அவர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் தண்ணீர், தங்க பாதுகாப்பான இடங்கள் இருந்தாலும் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் மக்கள் செய்வது அறியாது மழையில் நனைந்தபடி வீட்டு மாடிகளில் நின்று கொண்டு அதிகரிக்கும் வெள்ளத்தை பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். சென்னையில் உள்ள உறவினர்களின் பரிதாப நிலையை நினைத்து வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் கவலையில் வேலை எதுவும் செய்ய முடியாமல் பதட்டமாக உள்ளனர்.

கடவுளே, ஏதாவது செய், தயவு செய்து மழையை நிறுத்து என்று சென்னை மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications