கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தின் 80 இடங்களில் வருமானவரித்துறை சோதனை! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தில், வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 80க்கும் மேற்பட்ட கோகுலம் சிட் பண்ட் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் பல இடங்களில் இயங்கி வருகிறது கோகுலம் சிட் பண்ட் நிறுவனம்.இந்த நிறுவனம் முறையான வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி, வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 Gokulam Chit fund been raided by IT Officers.

சென்னை, கோவை மற்றும் புதுவை உள்ளிட்ட 80 இடங்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், துணைவேந்தர் கீதா லட்சுமி மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுய்பட்டது.

அந்த பரபரப்பு முடிவடைவதற்குள் கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gokulam Chit fund been raided by IT Officers. In Chennai, Kovai and in Pudhucherry raid is going on vigorously.
Please Wait while comments are loading...