தீவிர விசாரணைக்குப் பின் யுவராஜுக்கு ஒரு நாள் சிறை.. மீண்டும் காவலில் எடுக்கிறது போலீஸ்
சேலம்: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜ், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்குப் பின் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மற்றும் திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்தவர் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ். 107 நாட்கள் தலைமறைவாக இருந்த யுவராஜ், வாட்ஸ் அப் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டியளித்து வந்தார்.

ஞாயிறன்று நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடையப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் சொல்லியிருந்தார் யுவராஜ். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் காலையில் இருந்தே சிபிசிஐடி அலுவலகத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 10.30 மணிக்கு எந்த பக்கத்திலிருந்து வருகிறார், எந்த வாகனத்தில் வருகிறார் என்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். சிபிசிஐடி அலுவலகத்திற்குள் நுழைந்து சரண்டைவதற்குள் அவரை கைது செய்துவிடவேண்டும் என்று போலீசார் நினைத்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை. 11 மணிக்கு டிவிஎஸ் - 50 வண்டியில், முன்னால் ஒருவர் டூவீலரை ஓட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்துகொண்டு, மாறு வேடத்தில் வந்து இறங்கினார் யுவராஜ். லுங்கி கட்டிக்கொண்டு, கறுப்பு நிற டீ சர்ட் போட்டுக்கொண்டு, தலையில் சிகப்பு நிற தொப்பி போட்டுக்கொண்டு வந்திறங்கிய யுவராஜை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
வண்டியில் இருந்து இறங்கியதும், லுங்கி, டீ.சர்ட் தொப்பியை அகற்றிவிட்டு, உள்ளே ஏற்கனவே போட்டிருந்த வெள்ளை சட்ட உடையுடன் விறுவிறுவென்று நடந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு, போலீஸ் பிடியில் சிக்காதவாறு, சிபிசிஐடி அலுவலகத்திற்குள் சென்றார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட யுவராஜிடம், 12 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்றிரவு நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், யுவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications