ஜன.17-ல் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் எடப்பாடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் வரும் 17-ந் தேதி நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மிகவும் சிறப்பாக சென்று கொன்று இருக்கிறது.

Golden Jubilee celebration of TN on Jan.17

இந்த நிலையில் இன்றைய அமர்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி வரும் ஜனவரி 17ம் தேதி, சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த விழாவிற்கு முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் அழைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு போராடியவர்கள் இந்த நிகழ்வில் நினைவு கூறப்பட உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly started on Jan 8. In assembly CM Edappadi Palanisamy says Golden Jubilee celebration of Tamil Nadu state will be celebrated on Jan.17. Tamil Nadu got its name 50 years ago.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற