For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபாலபுரம் டூ காவேரி.. தொண்டர்களை அழ வைத்த கருணாநிதியின் இறுதி பயணம்

கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் காலமானார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தொண்டர்களை அழ வைத்த கருணாநிதியின் இறுதி பயணம்

    சென்னை: கருணாநிதி உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு பயணித்தது எப்படி என்பது குறித்த டைம்லைன் இதோ....

    கருணாநிதிக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனையில் பயணித்த இறுதி பயணம் குறித்த நினைவேடுகள்.

    Gopalapuram to Kauvery Hospital : What happened for Karunanidhi?

    ஜூலை 27 - கருணாநிதிக்கு இரவு 11.30 மணிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது

    ஜூலா 28 நள்ளிரவு 12 மணிக்கு - கருணாநிதியின் தனி மருத்துவர் கோபாலபுரம் வந்தார்

    12.10 மணிக்கு - ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கோபாலபுரம் வந்தனர்

    12.20 மணிக்கு - கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகரி கோபாலபுரத்துக்கு விரைந்தார்

    12.30 மணிக்கு- முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் கோபாலபுரத்துக்கு வந்தனர்

    1 மணிக்கு - கருணாநிதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கோபாலபுரம் இல்லம் வந்தது

    1.20 மணிக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது

    1.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு முதலே தொண்டர்கள் மருத்துவமனையை குவிய தொடங்கினர்

    2.20 மணிக்கு- செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவித்தார்.

    2.30 மணிக்கு - கருணாநிதி உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனையின் முதல் அறிக்கை வெளியீடு. 20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் சீரானதாக தகவல்

    2.35 மணிக்கு - தொண்டர்கள் நிம்மதி அடைந்து கலைந்தனர்

    2.45 மணிக்கு - திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை

    காலை 10 மணிக்கு- மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை

    12.30 மணி- குலாம் நபி ஆசாத் வருகை

    230 மணிக்கு- பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை

    இரவு 8 மணிக்கு- காவேரி மருத்துவமனை 2ஆவது அறிக்கை வெளியீடு. உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

    ஜூலை 29 காலை 10.15 மணிக்கு- மேற்கு வங்க திரிணமூல் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் வருகை

    10.45 மணிக்கு - பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் , தமிழிசை வருகை

    12.20 மணிக்கு- குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருகை

    12.30 மணிக்கு - கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியீடு

    இரவு 9.50 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலை குறித்து 3-ஆவது அறிக்கை வெளியீடு, உடல்நிலை சற்று நலிவுற்றிருப்பதாக தகவல்

    10.50- மணிக்கு உடல்நிலை சீராகி வருவதாக காவேரி மருத்துவமனை 4 -ஆவது அறிக்கை வெளியிட்டது.

    11.20 மணிக்கு- தொண்டர்களை தடியடி நடத்தி கலைத்தனர்

    11.30 மணிக்கு- சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி சென்னை விரைந்தார்

    ஜூலை 30 - காலை 12 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் காவேரி மருத்துவமனைக்கு வருகை

    ஜூலை 31- காலை 11 மணிக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர், இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதத்துடன் மருத்துவமனைக்கு வருகை

    ஜூலை 4 மணிக்கு- ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரிப்பு. அவர் சந்தித்த போது கருணாநிதி கண் திறந்து பார்த்த படம் வெளியானது

    இரவு 7.30 மணிக்கு- 5-ஆவது அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதாக தகவல்

    இரவு 9மணிக்கு - நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார்

    ஆகஸ்ட் 2- காலை 10 மணி- கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது

    ஆக.5- மதியம் 2. 50 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை

    ஆக.6 - மதியம் 12.50 மணிக்கு முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகை

    மாலை 6.30 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏறபட்டதாகவும் 24 மணி நேரம் கழித்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்றும் 6-ஆவது அறிக்கை வெளியானது

    7மணிக்கு - தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிய தொடங்கினர்

    ஆக.7 - ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியன குறைந்த அளவில் இருப்பதாக தகவல்

    4.00 மணிக்கு - ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்

    4.30 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக 7-ஆவது அறிக்கையை வெளியிட்டுள்ளது மருத்துவமனை

    6 மணி- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    6.10 மணிக்கு - கருணாநிதி மறைந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

    English summary
    Gopalapuram to Kauvery hospital: How Karunanidhi travelled?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X