For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளின் தற்கொலையை தடுக்காத அரசை கலைக்க வேண்டும்.. உண்ணாவிரதத்தில் அமீர் ஆவேசம்

விவசாயிகளின் மரணத்தைத் தடுக்க வேண்டும் என்று கோரி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், விவசாயிகளின் தற்கொலையை தடுக்காத அரசை கலைக்க வேண்டும் என்ற

Google Oneindia Tamil News

சென்னை: வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ளனர். இதனைத் தடுக்க சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் அமீர் விவசாயிகளின் தற்கொலையை தடுக்காத அரசை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் மேலும் அமீர் கூறியதாவது:

Government should be dissolved says director Ameer

இந்தப் போராட்டத்தை ஒரு சிறுபொறியாக நான் பார்க்கிறேன். இது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. முழுவதுமாக வெற்றி அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை இது. ஒரு உழவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாக இது உள்ளது. இப்படி ஒரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும். விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

ஜாதிப் பிரச்சனை, மதப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று விவசாயிகள் பிரச்சனைக்கும் முகம் கொடுக்க வேண்டும். வேளாண்மைதான் முதன் பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சனை இப்படியே போனால் இந்தியா இன்னும் கொஞ்சம் நாட்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும் என்று அமீர் கூறினார்.

English summary
Government should be dissolved says director Ameer Government should be dissolved said director Ameer in hunger strike for preventing farmer death due to drought today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X