குடியரசு தினம்: சென்னை காந்தி சிலையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால்!
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார்.
Recommended Video

சென்னை: நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 69வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைதொடர்ந்து உள் துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.
ஆளுநருடன் முப்படை அதிகாரிகளும் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார். இதில்
முதல்வர், துணை முதல்வர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications