நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு கருணையே கிடையாது! ஊட்டியில் நின்றபடி, சூடாக "வார்ன் செய்த" ஆளுநர் ரவி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு கருணை இல்லை என தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.

Recommended Video

    ஆளுநரின் ஊட்டி மீட் | தமிழக அரசே பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க மசோதா | Oneindia Tamil

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு தொடங்கியது. வளர்ந்து வரும் புதிய உலக அரங்கில் இந்தியாவின் பங்கு , 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் ஆகிய இரு தலைப்புகளின் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த மாநாட்டை துவங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன.

     ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வந்தது. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியுள்ளார்கள். அதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.

    மாவோயிஸ்டுகள்

    மாவோயிஸ்டுகள்

    மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக இருந்தது. ஆனால் அரசின் துரித நடவடிக்கையால் தற்போது மாவோயிஸ்ட்கள் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

    சமூக ஏற்றத் தாழ்வுகள்

    சமூக ஏற்றத் தாழ்வுகள்

    ஒரே நாடு ஒரே குடும்பம் இங்கு எந்தவித சமூக ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. இந்தியாவில் 2047 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்.

    70 சதவீதம் மாணவர்கள்

    70 சதவீதம் மாணவர்கள்

    இந்திய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆர்.என்.ரவி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+