For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள்.. லிஸ்ட் எடுக்கிறது அரசு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வரும் மெட்ரிக் பள்ளிகளை கணக்கெடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்க இயக்குனர் பிச்சை தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் குறைந்தபட்சம் இடவசதி, ஓரே அமைவிடத்தில் ஏற்படுத்தாத பள்ளிகள் இடவசதி சார்ந்த விதியை மாற்றியமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பரிநதுரைகள் அரசுக்கு சமர்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் தொடர்பான விபரங்களை அரசிடம் சமர்பிக்க தங்கள் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் தொடர்பான விபரங்களை படிவமாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.

இந்த படிவத்தில் பள்ளியின் வகை, இன்றைய தேதி் வரை அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் எண்ணி்க்கை, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் எண்ணிக்கை, இடம் பற்றாக்குறை காரணமான அங்கீகாரம் நிலுவையில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செயல்படுதல் காரணமாக அங்கீகாரம் நிலுவையில் உள்ள பள்ளிகள் போன்ற விபரங்களை அனுப்பி வைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பல தனியார் பள்ளியில் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது.

English summary
TN govt has ordered to take a list of un approved matriculations schools in the state and ordered for action against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X