ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில் திருக்குளம் பூமி பூஜை

வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில் திருக்குளம் திருப்பணி நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலாஜாபேட்டை ஸ்ரீகுபேர வீர ஆஞ்சநேயர் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைத்து மதில் சுவர் அமைக்க உள்ளனர். இதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

Guber Veera Anjaneyar Temple Thirukulam Tirupani D. Baskarapandian, IAS Ranipet District

ஸ்ரீராம ஜெயம் எனப்படும் ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். ஒரு கோடி ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜப மந்திர பிரதிஷ்டை நமக்கெல்லாம் பிரார்த்தனை நிறைவேற ஒரு அற்புத வாய்ப்பு பெரும் பாக்கியம் மஹா புண்ணியம் கிடைக்கும்.

Guber Veera Anjaneyar Temple Thirukulam Tirupani D. Baskarapandian, IAS Ranipet District

வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் சன்னதியில் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மஹா பெரியவா சன்னதியும் நவக்கிரஹ கோட்டை எனும் நவக்கிரஹ தோஷங்களும் நீங்கள் வகையில் 9 தனி தனி சன்னதியாக திருப்பணி செய்து மகா கும்பாபிஷேக செய்ய இறை அருள் கூடி உள்ளது.

Guber Veera Anjaneyar Temple Thirukulam Tirupani D. Baskarapandian, IAS Ranipet District

அன்னை ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் திருவருளும் மஹா பெரியவா குருவருளும் இணைந்து மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் லிகித ஜப மந்திர பிரதிஷ்டையாக செய்து விசேஷமான இந்த ஆலய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Guber Veera Anjaneyar Temple Thirukulam Tirupani D. Baskarapandian, IAS Ranipet District

இந்த சிறந்த பணியில் நாம் நம்முடைய குடும்ப நலனுக்காகவும் நமது தனிப்பட்ட பிரார்த்தனை நிறைவேறவும் லோக க்ஷேமத்திற்காகவும் ஸ்ரீ ராம ஜெயம் எனும் ராம நாமாவை ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 1008 முறையாவது எழுதி இந்த ஆலயத்திற்கு அனுப்பி வைத்தால் அதை மந்திர பிரதிஷ்டையாக செய்ய உதவியாக இருக்கும். இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய லிகித ஜபம் பலனும். விரைவில் பலகோடி செல்வ வளங்களும் உண்டாகும் என்பது சர்வ நிச்சயம்

ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் சன்னதியில் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மஹா பெரியவா சன்னதியும் நவக்கிரஹ கோட்டை எனும் நவக்கிரஹ தோஷங்களும் நீங்கள் வகையில் 9 தனி தனி சன்னதியாக திருப்பணி செய்து மஹா கும்பாபிஷேக செய்ய இறை அருள் கூடி உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ ராம ஜெயம் எனும் ராம நாமாவை ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 1008 முறையாவது எழுதி இந்த ஆலயத்திற்கு அனுப்பி வைத்தால் அதை மந்திர பிரதிஷ்டையாக செய்ய உதவியாக இருக்கும். இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஒரு கோடி முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய லிகித ஜபம் பலனும் கிடைக்கும்.

இந்த ஆலயத்திற்கான திருப்பணி குளம் தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீகுபேர வீர ஆஞ்சநேயர் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள தெய்வீக திருக்குளத்தை தூர்வாரி சீரமைத்து மதில் சுவர் அமைக்க சிவம் சேவா டிரஸ்ட் தன்னார்வளர்கள் மற்றும் பக்தர்கள் பொது மக்கள் இணைந்து திருப்பணி செய்ய பூமி பூஜை செய்ய அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து துவக்கி வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+