தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே இனி கிளியர் பண்ணுவோம்.. 10 வருடம் தான்.. அண்ணாமலை அமெரிக்காவில் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சான்பிரான்சிஸ்கோ: "தமிழக அரசியல் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது. பழைய சிஸ்டம் உடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதுவரை தேசியக் கட்சிகள் தயங்கின, ஆனால் இப்போது நாங்கள் களமிறங்கிவிட்டோம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசியலை முழுமையாகச் சீரமைப்போம்" என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஸ்டான்போர்ட் இந்திய மாநாடு நடந்தது. இதில் பாஜக சார்பில் அண்ணாமலை, எஸ்ஜி சூர்யா ஆகியோர் பங்கேற்றார். அதேபோல் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் பங்கேற்றார்.

We will now clear out the entire system of Tamil Nadu Annamalai in an interview in the US

இதில் அண்ணாமலை தமிழக அரசியல் குறித்து பேசிய அம்சங்களை பார்ப்போம். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் எப்படி ஒரு பழைய சந்தையை உடைத்து புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ, அதேபோல தமிழக அரசியலிலும் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பழைய அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் நடைமுறைகள் இப்போது "ஓவர்லோட்" ஆகிவிட்டன, அதாவது அவை காலாவதியாகிவிட்டன என்று அண்ணாமலை தனது கருத்தை கூறினார்.

அதேபோல் கடந்த காலங்களில் தேசியக் கட்சிகள் (காங்கிரஸ், பாஜக உட்பட) விந்திய மலைக்குத் தெற்கே, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தயங்கின. சவால்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தன. "காளையை அதன் கொம்புகளைப் பிடித்து அடக்குவது போல" துணிச்சலான அரசியலைச் செய்யத் தவறிவிட்டன என்பதை அண்ணாமலை நேர்காணல் பேச்சின்போது ஒப்புக்கொண்டார்.

அதேநேரம் தற்போது தமிழ்நாட்டில் அந்த நிலை மாறிவிட்டது என்றார். "நாங்கள் இப்போது அங்கே களத்தில் இருக்கிறோம்" என்று குறிப்பிடுவதன் மூலம், பாஜக இப்போது தமிழக அரசியலில் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தார் அண்ணாமலை.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தமிழக அரசியலில் உள்ள தேக்க நிலையை அடியோடு அகற்றி, ஒரு மிகப்பெரிய "சுத்திகரிப்பை" (Clearance) செய்யப்போவதாக அண்ணாமலை சூளுரைத்தார். அதாவது, திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்குவதே தங்கள் இலக்கு என்பதைத் தெளிவாக கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பேசுகையில், இந்த SIR (Smart Identity Register) பற்றி... பதில் சொல்ல வேண்டிய பல நியாயமான கேள்விகள் உள்ளன. மேற்கு வங்க உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு சுமார் 91 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. அவர்களில், உயிருடன் இருக்கும் 34 லட்சம் பேர், தாங்கள் இங்கேயே இருப்பதாகவும், வாக்களிக்க தங்களுக்குச் சட்டப்பூர்வமான உரிமை இருப்பதாகவும் கூறி மேல்முறையீடு செய்துள்ளனர்."

"மீதமுள்ள ஆண்டுகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அவர்களில் சுமார் 31-32 லட்சம் மக்கள் முறையான வாக்காளர்கள் என்று கண்டறியப்படலாம். ஆனால், அவர்கள் தங்களின் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் பாஜக 30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போது நீங்கள் சொல்லுங்கள், இது முற்றிலும் நியாயமான மற்றும் ஜனநாயகமான ஒன்றா?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சசிதரூர் கேரளா பற்றி பேசுகையில், "...கேரளாவைப் பொறுத்தவரை, இந்த நீக்கங்களினால் காங்கிரஸ் பயனடைந்திருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால், ஒரே நபர் இரண்டு, மூன்று, நான்கு இடங்களில் பெயர்களைப் பதிவு செய்வதில் சிபிஐஎம் (CPIM) நீண்டகாலமாக நிபுணத்துவம் பெற்றிருந்தது... அது முன்பு நடந்து வந்தது. எனவே, அவர்கள் இந்த SIR முறையினால் நீக்கப்பட்டனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+