தன் வீட்டில் ரெய்டு நடக்கும்னு தெரியாதவர்கிட்ட ஜோசியம் பார்க்கலாமா?... வம்பிழுக்கும் எச். ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோஸ்யரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்பவாவது புரிந்திருக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

சசிகலா குடும்பத்தினரை சுற்றிச் சுழன்றடிக்கும் வருமான வரி சோதனை சூறாவளியில் அவர் ஜோசியம் பார்த்த ஜோதிடர் கூட மிஸ் ஆகிவிடவில்லை. சசிகலா, தினகரன் ஜோசியம் பார்த்த கடலுார் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்பதை கூட தெரியாத ஜோசியரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்பவாவது புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

பெரியாரே சொல்லிட்டாரு

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் உடனுக்குடன் பதிலை பறக்கவிட்டுள்ளனர். அதான் சார் சொல்றோம், இந்த ஜோசியக்காரனுங்க, மாந்திரீகனுங்க, சாமியார் எல்லாம் நம்பாதீங்க. இந்த ஆரியனுங்க அவுத்துவிட்ட கட்டுக்கதை. அதெல்லாம் ஈர வெங்காயம்னு எங்க தாத்தா பெரியார் சொல்லிட்டார் என்று டுவீட்டியுள்ளார் இந்த வலைபதிவர்.

எப்படி யாரோ ஒருவர் கிட்ட கேட்கலாம்?

அதானே பெரிய ஜோசியர் ராஜா கிட்ட கேக்காம எப்டி யாரோ ஒருவர் கிட்ட கேட்கலாம் தினகரன் என்று வம்பிழுக்கும் எச். ராஜாவையே சீண்டிப் பார்க்கிறார் இந்த நெட்டிசன்.

மெர்சலுக்கு அப்புறம் தினகரன்

மெர்சலுக்கு அப்புறம் இப்போ டிடிவி தான் ஃபேமஸ். அரசாங்கத்திடம் இருந்து அவருக்கு இலவச பப்ளிசிட்டி என்று கேலி செய்கிறார் இந்த சமூக வலைபதிவர்.

வீட்லயா ஆபீஸ்லயா?

அதாவது உங்க கிட்ட ஜோசியம் பார்க்க சொல்றீங்க, ஆபீஸ் லயா? வீட்லயா? தல என்று ரகளை கூட்டுகிறார் இவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
H.Raja jibes the Cuddalore based astrologer who is under inccome tax scanner as he done astrology to Sasikala and Dinakaran

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற