அரசு இடத்தில் கோயில்கள் கூடாது என்றால் கோயில்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா... எச்.ராஜா கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோயில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? என பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் போது தெய்வங்களின் சிலை வைத்து கோயில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

H.Raja raises questions about government offices in temple land

மேலும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோயிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோயில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள கருத்தில் "அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோவில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? என கேட்டுள்ளார். மேலும் "அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும்" என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP national secretary H.Raja raises questions in twitter that if temples in government land demolished then how government offices in temple land and also insisted to remove all the statues from government land and on the roadside.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற