பராசக்தி படம் இப்போது வெளியானால் இதுதான் நடக்கும்.. ப.சிதம்பரத்திற்கு எச்.ராஜா பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பராசக்தி படம் இப்போது வெளியானால் இதுதான் நடக்கும்.. ப.சிதம்பரத்திற்கு எச்.ராஜா பதில்!-வீடியோ

  சென்னை: இன்று பராசக்தி படம் வெளியானால் கோவிலில் இருந்து மக்கள் அரசை வெளியேற்றுவார்கள் என ப.சிதம்பரத்துக்கு எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

  இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளுக்குப் பின் தீபாவளியன்று வெளியானது. இந்தப் படத்தில் பாஜக அரசுக்கு எதிராக ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

  இதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

  கருத்து சுதந்திரம் பறிப்பு

  கருத்து சுதந்திரம் பறிப்பு

  இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தின் காட்சிகளை நீக்குவது, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பராசக்தி வெளியானால்

  பராசக்தி வெளியானால்

  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மெர்சலுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பாஜக கோருகிறது. பராசக்தி படம் தற்போது வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

  ப.சி.க்கு எச்.ராஜா பதில்

  அரசை புகழ்ந்து இனி டாக்குமென்ட்ரி படங்கள்தான் எடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டிவிட்டர் வாயிலாகவே பதிலடி கொடுத்துள்ளார்.

  கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது

  கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது

  பராசக்தி படம் வெளியானால் கோவிலில் இருந்து மக்கள் அரசை வெளியேற்றுவார்கள் என ப.சிதம்பரத்துக்கு எச் ராஜா பதில் தெரிவித்ததுள்ளார். கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது என மக்கள் அரசை வெளியேற்றுவார்கள் என எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

  திராவிடக்கட்சிகள் மீது பாய்ச்சால்

  திராவிடக்கட்சிகள் மீது பாய்ச்சால்

  கோவில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

  அவை அறநிலையத்துறை வசம் உள்ளது.
  இதனால் அவை கொள்ளையர்களின்ன கூடாரம் ஆகிவிட்டது என ப.சிதம்பரத்துக்கு பதிலளித்தன் மூலம் மறைமுகமாக திராவிடக்கட்சிகளை சாடியுள்ளார் எச்.ராஜா

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  H Raja responded to P.Chidambaram on Mersal issue. He said it the movie parasakthi release now the govt will be sending out from the temple by the people.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற