For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை அது கோஷ்டி மோதல்: எச்.ராஜா புது விளக்கம்

மீனவர்கள் காயமடைந்தது துப்பாக்கிச் சூட்டினால் அல்ல என்றும் அது கோஷ்டி மோதலால் ஏற்பட்டது என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்படவில்லை, கோஷ்டி மோதலால் ஏற்பட்ட காயம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி இந்திய கடலோர காவல் படையினர் வருவதை கண்ட மீனவர்கள் வேகமாக கரை திரும்ப முயற்சித்தனர்.

H.Raja says that fishermen shooting incident was a factional conflict between them

அப்போது அதிகாரிகள் ரப்பர் குண்டுகளால் மீனவர்களை நோக்கி சுட்டத்தில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை தாங்கள் நடத்த வில்லை என்று இந்திய கடலோர காவல் படையினர் மறுத்த நிலையில் பின்னர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரப்பர் தோட்டா கடலோர காவல் படையினருடையது அல்ல என்று முரணான ஒரு கருத்தை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில், இரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம் தான் இருக்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது என்று ஒரு விளக்கத்தை அளித்திருந்தார்.

இதற்கு அவரை பின்தொடர்பவர்கள் கருத்து பரிமாறிக் கொண்ட நிலையில், இந்திய கடற்படை சுடவேயில்லை,நீங்க நீட்டி முழங்க வேண்டாம் சார்! என்ற டுவீட்டுக்கு பதில் கொடுத்த எச்.ராஜா, மீனவர்கள் காயமடைந்தது கோஷ்டி மோதலால் என்பது போன்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

English summary
H.Raja says that fishermen got injured not because of shooting, it was a conflict between two teams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X