18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை செய்யப்படவுள்ளது. சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணை நடைபெற இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

டிடிவி. தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விளக்கிக் கொள்வதாக ஆளுநருக்கு சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அளித்தனர். இந்த விவகாரத்தில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

HC hears Dinakaran supporters disqualification case today

ஆனால் 18 எம்எல்ஏக்களும் தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதே போன்று தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரினர்.

இந்த வழக்கில் வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதம் முடிந்த நிலையில் வழக்கு விசாரணை சூடாக நடைபெற்று வருகிறது. தற்போது மற்ற தரப்பு வாதங்கள் கேட்கப்பட்ட உள்ளது.

அதன்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை செய்யப்படவுள்ளது. இன்று சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விசாரணை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV. Dinakaran supportive 18 MLAS disqualified case and 7 other cases by DMK and ADMK amma faction is to be heared at Madras Highcourt today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற