“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கோயிலில் பக்தர்களுக்கு மேற்கூரை வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூடுதல் வசதிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோயிலில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு உரிய வசதிகளை செய்துள்ளது, நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து சமீப நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications