For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க ஹைகோர்ட் அதிரடி தடை

கட் அவுட், பேனர்களில் உயிருடன் இருப்பவர்கள் படங்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உயிருடன் உள்ளவர்களின் படங்களை கட் அவுட், பேனர்களில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது.

பல அடி உயரங்களுக்கு பேனர்களை வைப்பதால் சாலைகள் மறைக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பேனர்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படத்தை மற்ற கோஷ்டியினரோ மற்ற கட்சியினரோ கிழித்து விட்டாலோ போலீஸாருக்கு பெரும் தலைவலி ஏற்படுகிறது.

HC orders to govt. do not contain living indivuals pics in Banners

இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டருகே ஏராளமான பேனர்களும், கட்சி விளம்பரங்களும் வைக்கப்படுவதால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதி கூறுகையில், உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று தமிழகதலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் இந்த உத்தரவு குறித்து தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Madras High Court today directed to the state government to ensure that hoardings, banners do not contain pictures of living individuals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X