டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: வழக்கறிஞர் உட்பட மூவர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (59). அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களாக அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறும்போது 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, இந்த படுகொலை நடந்த விதம், மருத்துவமனை அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.
காவல்துறையினரால் தேடப்பட்ட வழக்கறிஞர் பெய்சில், அவருடைய தம்பியும், என்ஜினீயருமான போரீஸ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், இவர்களின் பெற்றோர் பொன்சாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர் வில்லியம்ஸ் உள்பட 3 பேர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினரின் விசாரணை நிலுவையில் உள்ளதால் மனுவை நிராகரிப்பதாக கூறி, அதனை நிராகரித்து உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications