For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலையில் கொட்டிய கடும் பனி... முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் பயணித்த வாகனங்கள்.. நெல்லையில்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சிலதினங்களாக காலை கடும் பனி மூட்டம் இருந்து வருவதால் அதிகாலையில் கேரளாவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை அணைக்காமல் சென்றுவருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு எதிர்பார்த்த அளவைவிட அதிக அளவில் பெய்துள்ளது.

மேலும் பல்வேறு புயல்கள் காரணமாகவும் பெய்த பலத்த மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள நீர் தேக்கங்கள்,குளங்கள்,குட்டைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில், போதிய நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து கார் ,பிசான சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Heavy fog engulfs Nellai

ஐப்பசியில் அடைமழை:

பொதுவாக ஐப்பசியில் அடை மழை, கார்த்திகையில் கன மழை பெய்யும் என்பது காலங்காலமாக நம் முன்னோர்கள் சொல்ல கேட்டுள்ளோம்.

மழை வானிலை நீடிப்பு:

ஆனால் இந்த ஆண்டு அவர்கள் சொன்னதைப் போல் தொடர்ந்து மழை வானிலையே நீடித்து வருகிறது.

மார்கழியில்தானே வர வேண்டும் பனி:

வழக்கமாக மார்கழி மாதம்தான் பனிப்பொழிவு துவங்கும்.

கொட்டும் பனி:

ஆனால் இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தின் இறுதியிலேயே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக செங்கோட்டை,கேரளா எல்லைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

முகப்பு விளக்குடன் பயணம்:

அதனால், சரக்கு ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை போட்டபடி சென்ற வண்ணம் உள்ளனர்.மேலும் பகல் நேரத்திலும், மாலைப் பொழுதும் வெயிலின்தாக்கம் அதிகமாக இருந்தது.

பனிமூட்டம் அதிகம்:

இதேபோல் கமுதி உள்ளிட்ட வட்டாரப் பகுதி ஊர்களில் அதிகாலை கடும் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் முன்புற விளக்கொளியில்தான் மெதுவாக செல்ல வேண்டி இருந்தது.

கடும் வெப்பம் வேறு:

பொதுவாக கார்த்திகை மாதத்தில் மழை பெய்வது குறையும் போதும் மார்கழி மாதத்தில் குளிர் காலம் துவங்கும் சமயம்தா ன் வெம்பா என்றும் பனி மூட்டம் உருவாகும். ஆனால் தற்போது கோடை காலம் துவங்கி, கடும் வெப்பம் நிலவி வருகிறது.

மாறும் இயற்கை:

இந்த சூழ்நிலையில் இயற்கைக்கு மாறாக கடும் பனி மூட்டம் கமுதி உள்ளிட்டபகுதிகளில் உள்ளதால் அதிகாலை கடுமையான பனி மூட்டம் நிலவியது.

பொதுமக்கள் வியப்பு:

இதனால் 4 சக்கர, இரு சக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்றவர்கள்,. முன்புற விளக்கு ஒளியில்தான் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிகிறது. இயற்கையின் மாற்றத்தை ஆங்காங்கே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்தபடியே சென்றவண்ணம் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி:

பனி மூட்டம் உ ருவானால் மழையே பெய்யாது என்பார்கள். ஆனால் கோடை மழை க்குப் பதில் வானிலையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக புயல் மலை பொழிவதால் இந்த ஆண்டு பெய்யாமற்போகுமோ என்ற கவலையில் இருந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Nellai district surrounded with fog. People will happy because of monsoon rain for agriculture hope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X